ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முடிவு

sterlite.jpeg

file photo

​மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால், அதை விற்பனை செய்வதாக அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் புகை போன்றவற்றால் அந்த பகுதி மக்கள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆலைக்கு எதிராக 2016-ம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு போராட்டம் தீவிரம் அடைந்தது. 100 நாள் நடைபெற்ற இந்த போராட்டத்தின் இறுதி நாளில் கடும் வன்முறை வெடித்தது. காவல்துறையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து, அந்த ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து, ஆலையை மூடியது.

இந்த நிலையில், தற்போது, ஆலையை விற்பனை செய்யவில்லை என வேதாந்தா நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், ஆலையை மீண்டும் திறக்க இருப்பதாகவும், இது தொடர்பாக அந்த பகுதி மக்களிடம்  பேச்சு நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

scroll to top