வ.உ.சி. பாலத்தின் கீழ் வாள்,கத்தி, கஞ்சாவுடன் 2 பேர் கைது

எஸ்எஸ் காலனியில் வாள், கத்தி ,கஞ்சாவுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேரரசி. இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எஸ் எஸ் காலனி வ.உ.சி பாலத்தின் அடியில் வாலிபர்கள் இருவர் போலீசை கண்டதும் பதுங்கினர்.அவர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினார். சோதனையில் அவர்கள் வாள், கத்தி, ஒன்றும் 150 கிராம் கஞ்சாவையும் பதுக்கி வைத்து இருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினார் .விசாரணையில் அவர்கள்எல்லீஸ்நகரைச் சேர்ந்த சுந்தர் மகன் கௌதம் 22 , வல்லரசு 21 என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

scroll to top