வைகை ஆற்றில் உலோகத்தால் ஆன விநாயகர் சிலை

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் செம்பு உலோகத்தால் ஆன விநாயகர் சிலை கிடப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வைகை ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் ஒன்னே முக்கால் அடி உயரம் கொண்ட ஒன்றரை கிலோ எடை கொண்ட செம்பு உலோகத்தால் ஆனது என்று விசாரணையில் தெரியவந்தது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் இந்த சிலை கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் எப்படி வந்தது இந்த சிலையை எங்காவது திருடி வந்து உள்ளனரா இந்த சிலை செம்பு உலகத்தால் உள்ளதால் சிலை திருடியவர்கள் இங்கு விட்டுச் சென்றுள்ளனர் என்று போலீசார் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்

scroll to top