வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ. 1 லட்சம்.

buj.jpg

தமிழக சட்டப்பேரவையில் 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிவிப்பில், வேளாண் துறையில் சிறந்த விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்.வேளாண்மை பட்ட ப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மயிலாடுதுறையில் மண்பரிசோதனைக் கூடம் அமைக்கப்படும். சோயா பீன்ஸ் உற்பத்தி திட்டத்துக்கு ரூ.1.20 கோடி ஒதுக்கப்படும். விதை முதல் உற்பத்தி வரை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழிகாட்ட செயலி அறிமுகப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் மரம் வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்படும். இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும். தக்காளி விலை உயர்வைத் தடுக்க, ஆண்டுமுழுவதும் விளைவிக்கப்படும் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு. துவரை சாகுபடிக்கு சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

scroll to top