வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சிவகாசி ஸ்ரீமாரியம்மன்

amman.jpg

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு, ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.

இதனையடுத்து ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ‘வெள்ளி ரிஷப’ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனிப் பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை 9ம் தேதி (ஞாயிறு கிழமை) நடைபெறுகிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அக்கினிச்சட்டி, கயிறுகுத்து திருவிழா நாளை மறுநாள் 10ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. பங்குனிப் பொங்கல் தேரோட்டம் விழா, வரும் 12ம் தேதி (புதன் கிழமை) மாலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

scroll to top