வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்த்வேல்குமாருக்கு வரவேற்பு

கொலம்பியாவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடந்த, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில், சென்னையை சேர்ந்த ஆனந்த்வேல்குமார் வெள்ளி பதக்கம் வென்றார். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில், வீரர், வீராங்கனைகளுக்கு, பூச் செண்டு, பொன்னாடை அளித்து, உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சாமுவேல்ராஜா டேனியல், முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா, வீரபத்ரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

scroll to top