வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கன்று குட்டி மீட்பு

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, மூன்று நாட்களாக குடிநீர், உணவு இன்றி தவித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர் மழையால் பெங்களூரு சங்கரமடம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று, வெள்ளத்தில் அடித்து வரபட்டு சேற்றில் சிக்கி மூன்று நாட்களாக தண்ணீர், உணவு இன்றி அவதிப்பட்டது.இதை கவனித்த அப்பகுதியினர் அந்த கன்றுக்குட்டியை மீட்டு தண்ணீரும், உணவும் வழங்கினர். உடலில் காயம் ஏற்பட்டிருந்ததால், வாகனம் மூலம் ஹெப்பாலில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்றுக் குட்டியை மீட்டு சிகிச்சை அளிக்க உதவிய அப்பகுதியினரை பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

scroll to top