வெப் தொடரில் நடிக்கும் திவ்ய பாரதி

cv3.jpg

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில் டைரக்டர் சேரனும் வெப் தொடர் இயக்க தயாராகி உள்ளார். அதில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 5 பேரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இந்த தொடரை எடுக்கிறார். இதில் நடிக்க பிரகாஷ்ராஜ், ஜெய பிரகாஷ் ஆகியோரிடமும் பேசி வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. திவ்ய பாரதி சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top