மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் பணியாளர்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படாவண்ணம் சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். பின்பு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்தை கடைகள் விவரங்கள் கேட்டறிந்தார்.
கடை விற்பனை செய்ய அனுமதி வாங்கிவிட்டு கடையை தனியாருக்கு விடுபவர்கள் கடையை வைக்காதவர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களைக் கேட்டறிந்தார். சந்தையில் கடை வைக்காதவர்கள் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் தங்களுக்கான குறைகளை தெரியப்படுத்தி எளிய முறையில் தீர்வு காண
தன்னை எந்தநேரமும்.தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.