வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழாவில் வாகனங்களில் ஊர்வலமாக சென்ற 453 பேர் திருநகர் மீது வழக்குப் பதிவு:

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 வது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஜனவரி 3-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு தரப்பினர் வருகை தந்தனர்.

அதே சமயத்தில், பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர் பட்டாளமும் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் சாரைசாரையாக சாலைகளில் வலம் வந்தனர். இந்நிலையில், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அரசு பேருந்து மற்றும் சாலையில் சென்ற வாகனங்களில் ஏறிநின்று சேதம் செய்தது மற்றும் கொரோனா தொற்று 144 தடை உத்தரவை மீறி கூட்டம் சேர்த்தல் என்று உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட திருநகர் காவல் துறையினர் அய்யனார் என்ற நபர் வைத்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பின் மீதும் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்த 453 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

scroll to top