வீரபாண்டிபுதூரில் மளிகை கடையை சூறையாடிய காட்டு யானைகள்

WhatsApp-Image-2023-04-27-at-19.28.43.jpg

​கோவை வீரபாண்டிபுதூரில் உள்ள மளிகை கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தின. கோடை காலம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தேடி கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி,  ஆகிய பகுதிகளில்   வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வருகின்றன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றுள்ளந. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் நுழைவது அடிக்கடி காட்டு யானைகள் நுழைவது அந்த ஊர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

scroll to top