வீட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை

மதுரை வில்லாபுரத்தில், வீட்டை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வில்லாபுரம் மீனாட்சி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் 52. இவர், சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, சண்முகம் அவனியாபுரம் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

scroll to top