வீட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை

ஒத்தக்கடையில் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரை ஒத்தக்கடை சொர்ன மீனா நகரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி வாணிஸ்ரீ 39. இவர் குடும்பத்துடன், உறவினர் வீட்டுக்குச் சென்று இருந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு தெரிவித்தனர் . பின்னர், அவர் வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்
பட்டிருந்தது .வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஆறே முக்கால் பவுன் நகை மற்றும் பணம் ரூபாய் 30 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து ,வாணிஸ்ரீ ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

scroll to top