வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக்கள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு

சூலூர் அருகே நிலம்பூரில் மூன்று மாடிக் கட்டடத்தில் கீழ்தளத்தில் நிறுத்தி வைத்திருந்த புல்லட் மற்றும் யமாஹா எப்.இசட் வாகனங்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

சூலூர் அருகே நீலம்பூரில் வசிப்பவர் இளங்கோ இவர் முத்து கவுண்டன்புதூர் அருகே உள்ள கிரஹா காஸ்டிங் என்னும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து. இவர் பணி முடிந்து தனது வீட்டுக்கு சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் தனது புல்லட்டில் திரும்பியுள்ளார். புல்லட்டை கீழ்தளத்தில் நிறுத்தி வைத்துவிட்டு தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். சனிக்கிழமை காலை வந்து பார்த்தபோது அங்கு புல்லட்டை காணவில்லை. இது குறித்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது நள்ளிரவில் 2 நபர்கள் புல்லட் மற்றும் யமாஹா எப்.இசட் ஆகிய இரு வாகனங்களை அப்பகுதியிலிருந்து திருடிச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து சூலூர் காவல் துறையில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.

இதே பகுதியில் சென்ற மாதம் சூலூர் காவல் ஆய்வாளர் இருசக்கர வாகன திருடர்களை துரத்தி பிடித்தது செய்திகளில் வெளிவந்தது. அதை தொடர்ந்து அவருக்கு முதலமைச்சர் விருது மற்றும் டிஜிபி ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு அளித்தது பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top