வீட்டில் காய்ச்சல் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வராதீர்கள்

Tamil_News_large_2950837-e1643780943509.jpg

தமிழகத்தில், 40 நாட்களுக்கு பின் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. தடுப்பு நடவடிக்கைஇதையடுத்து, சென்னை அசோக் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறியதாவது, கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், முக கவசம்அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போட்டு கொள்ளுதல் போன்ற கொரோனா சார்ந்த பழக்கவழக்கங்களை, மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.சுழற்சி முறையில் வகுப்புகொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்; உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மறைக்காமல் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்கவேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொற்று குறைந்து வந்தாலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றினால் தொற்றை ஒழித்து விடலாம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

scroll to top