முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் விழா பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் செந்தில் பாலாஜி ஆற்றிய பணிகளால் கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவிகித வெற்றி பெற்றுத் தந்திருக்கிறாரென்றால் அதன் முழு பெருமைமையும் உழைப்பும் செந்தில் பாலாஜியையே சாரும்.
இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்துள்ள அனைவருக்கும் கலைஞரின் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள் இதனை உங்களிடம் வேண்டுகோளாக முன் வைப்பதாகவும் இந்த ஒரே ஒரு உறுதியை மட்டும் தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.
தற்போது இந்தி மொழி திணிக்கப்பட்டு வரும் நிலையில் நம்முடைய தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டுமெனில் இது போன்ற சிறு சிறு விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். மேலும் வீட்டில் அரசியல் பேசுங்கள் எனவும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது,இந்தியாவில் என்ன நடக்கிறது, ஒன்றிய அரசு என்ன செய்கிறது, தமிழக அரசு சார்பில் தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அதிமுக ஆட்சி நம்மிடம் அரசை விட்டு விட்டு சென்ற பொழுது கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. கோவிட் பெருந்தொற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்த கோவை மாவட்டம் அப்போது அதற்கான உடை அணிந்து மருத்துவமனைக்குள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டவர் இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் தான். இதனை யாரும் மறந்து விடக்கூடாது எனவும் தெரிவித்த அவர் நம்முடைய மக்களுக்கு மறதி என்பது அதிகம் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள் என்றார்.
திமுகவினர் எப்பொழுதும் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள், தேர்தல் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களோடு இருந்து மக்கள் பணி ஆற்றுப்பவர்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தினர் எனவே இந்த அரசுக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்” என பேசினார்.