பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளை ஒதுக்கிவிட்டு ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை அடுத்து, முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். அவரது தலைமையில் 10 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில், லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்தார். இதன்மூலம் பொதுமக்கள் புகார் மற்றும் வீடியோ அனுப்பினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அதற்கான எண்ணையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாபில் பொதுமக்களுக்கு வீடு தேடி ரேசன் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், பஞ்சாப் மக்களுக்கு வீட்டு வாசலில் ரேஷன் விநியோகத்தை தொடங்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. எங்கள் அதிகாரிகள் உங்களை அழைப்பார்கள், அதற்கான நேரத்தைக் கேட்பார்கள் & அந்த நேரத்தில் வழங்குவார்கள். இது ஒரு விருப்பத் திட்டம் என கூறியுள்ளர்.பஞ்சாப் மாநில முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வீட்டிலேயே ரேசன் பொருட்கள் விநியோகம்: பஞ்சாப் முதல்வர்
