வீடு புகுந்து நகை திருட்டு போலீஸ் விசாரணை

ஒத்தக்கடையில் வீடு புகுந்து நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை வரிச்சியூர் உறங்கான்பட்டி நடுத் தெருவை சேர்ந்தவர்
காளியம்மாள் 40 .இவர் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது .வீட்டில் பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகையை மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து காளியம்மாள் ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

scroll to top