’விவோ டி1 5ஜி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’விவோ டி1 5ஜி’ ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் அதிகப்படியான விற்பனையை சாத்தியப்படுத்தி வரும் விவோ நிறுவனம் தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளை வேகமாக சந்தைப்படுத்தி வருகிறது.
’விவோ டி1 5ஜி’ சிறப்பம்சங்கள் : *6.67 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரை *குவால்கம் ஸ்னாப் டிராகன் 778 * உள்ளக நினைவகம் 8 ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி *ஆன்டுராய்ட் 11 * 64 எம்பி முதன்மை கேமராவுடன் 8 எம்பி கூடுதல் லென்ஸ் , 16 எம்பி செல்ஃபி கேமரா *5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி இந்தியாவில் 8ஜிபி+128ஜிபி, 8ஜிபி+256 ஜிபி , 12ஜிபி+256 ஜிபி என மூன்று வகையான நினைவக வசதிகளுடன் வெளியாகும் ’டி1 5ஜி’ ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

scroll to top