விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

IMG_20211005_110656.jpg

மத்திய அரசுயின் மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த குடும்பத்தினரை காணச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.  இதில்  கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி,மாநகர் மாவட்ட துணைத்  தலைவர் ராம நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் வீனஸ் மணி, ராஜாமணி, உமாபதி, கருப்பசாமி, சீனிவாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

scroll to top