விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவிகளுக்கு, கல்விக்கடன் ஆணை வழங்கிய ஆட்சியர்

coll.jpg

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காண்கின்றனர். குறைதீர் கூட்டத்தில் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி பகுதியைச் சேர்ந்த வேளாண்மை கல்லூரி மாணவி அருணாதேவி என்பவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் இளங்கலை தோட்டக்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், கல்லூரி தேர்வு கட்டணம் கட்டுவதற்காக கல்விக்கடன் கேட்டு கோரிக்கை மனு கொடுத்திருந்தார். அவரது மனுவை பரீசிலனை செய்யப்பட்டு, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி மூலம், கல்லூரி மாணவிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் ஆணையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

மேலும், தேனி மாவட்டத்தில் இளங்கலை செவிலியர் 3ம் ஆண்டு படித்து வரும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த மாணவி சினேகா என்பவருக்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் 2 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

scroll to top