விருதுநகர் மாவட்டத்தில் தனியாக வசித்துவரும் முதியவர்களின் பாதுகாப்பு வசதிகளுக்காக புதிய செல்போன் எண் அறிமுகப்படுத்துவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநர் மாவட்டத்தில் தனியாக வசித்துவரும் முதியவர்களுக்கு உதவி செய்திட புதிய செல்போன் எண் 93422 59833 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியில், தங்களுக்கு தேவைப்படும் உதவிகள், மருத்துவ உதவிகள், அவசர தேவைகள் குறித்தும் மற்றும் தங்கள் வீடுகள் இருக்கும் பகுதிகளில் அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாட்டம், சந்தேகப்படும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் அது குறித்தும் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் குடியிருப்பு பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனை அந்தந்தப் பகுதி காவல்நிலைய ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவி எண் அறிமுகம்: மாவட்ட எஸ்.பி. அறிவிப்பு
