விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் விபத்து

WhatsApp-Image-2022-03-03-at-9.02.51-PM.jpeg

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் – சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று மாலை, மருந்து அலசும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தால், பக்கத்தில் இருந்த அறைகளிலிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சிதறின. இதனால் பட்டாசு ஆலை முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் அனைவரும், பட்டாசு ஆலையை விட்டு ஓடிவந்து உயிர் தப்பியுள்ளனர். சாத்தூர் மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தெய்வாதீனமாக தொழிலாளர்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை, அனைவரும் தப்பியோடி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து சூலக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top