விருதுநகருக்கு வந்த விரைவு ரயிலில், 15 கிலோ கஞ்சா மீட்பு… மர்ம ஆசாமிக்கு போலீசார் வலை

WhatsApp-Image-2023-05-14-at-10.11.55.jpg

சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் நேற்று மாலை விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது அங்கிருந்த ரயில்வே போலீசார், எஸ்1 பெட்டியில் சோதனை செய்தனர். அங்கு கேட்பார் இல்லாமல் இருந்த ஒரு பையை போலீசார் சோதனை செய்தனர். அந்தப் பையில் சிறிய அளவிலான பொட்டலங்களில் சுமார் 15 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ரயில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விசாரித்த போது, அந்தப் பையை யார் கொண்டு வைத்தது என்று தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். விரைவு ரயிலில் கஞ்சாவை கடத்திச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விருதுநகர் ரயில் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

scroll to top