THE KOVAI HERALD:
மக்களுக்கு மிகத் தூய்மையான பால் மட்டுமின்றி, தரமான பால் பொருட்களையும் மக்களுக்கு வழங்கி வரும் கிராமத்துப் பால் நிறுவனர் டாக்டர் கே.ஜனார்த்தனனுக்கு, டைம்ஸ் குழுமம் சார்பில் சிறந்த பால் பண்ணைக்கான எக்ஸலன்ஸ் இன் மில்க்' விருதை தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி கவுரப்படுத்தியுள்ளார். இதுபோல சுமார் 400 விருதுகளைக் குவித்துள்ள கே.ஜனார்த்தனன், சிவில் இன்ஜினியர், கட்டிட ஒப்பந்ததாரர் என்று பல பணிகள் புரிந்தாலும், மிகத் தரமான, தூய்மையான பால் விற்பனையாளர் என்பதே இவருக்கான அடையாளம். கொங்கு மண்டலத்தின் மையமான கோவையில் இவரைத் தெரியாதவர் யாருமில்லை எனலாம். எத்தனை பெரிய அங்கீகாரங் கள் கிடைத்தாலும், அதைப்பற்றிக் கொஞ்சமும் கர்வம் கொள்ளாமல், மக்களுக்கான சேவை களைத் தொடர்வதே கோவையில் இவருக்கு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், விருதுகளையும் குவித்துள்ளது. கட்டிட ஒப்பந்தப் பணி, கட்டுமானப் பணி என பரபரப்பாக இருந்தாலும், மாட்டுப் பண்ணையைத் தொடங்கி, சுத்தமான, தரமான பாலை மக்களுக்கு வழங்குவதே லட்சியம் என்ற நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கே.ஜனார்த்தனன். கிராமத்துப் பால் கோவை கணபதியிலிருந்து காந்தி மாநகர் செல்லும் வழியில் உள்ள
கிராமத்துப் பால்’ பண்ணையில், அதிகாலை முதலே சுறு சுறுப்பாக பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார் கே.ஜனார்த்தனன். இவரது பூர்வீகமே கோவைதான். பெற்றோர் கந்தசாமி-நீலாமணி. தந்தை பொதுப்பணித் துறை கட்டுமான ஒப்பந்ததார். தாய் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள குரும்பாளை யைச் சேர்ந்தவர்.
விவசாயக் குடும்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன், கோவையில் பள்ளிக் கல்வியும், சிவில் இன்ஜி னீயரிங்கில் டிப்ளமோவும் படித்துள்ளார். தந்தை யின் வழியில் கட்டிட ஒப்பந் தங்களை மேற்கொண்ட இவருக்கு, 2011-ல் திரு மணம். இவரது மனைவி அபிநயா, திருப்பூர் மாவட்டம் மூலனூரைச் சேர்ந்தவர். திருமணமாகி கோவை வந்த அபிநயாவுக்கு, பாக்கெட் பால் பிடிக்கலை. இதனால் அவரது தந்தை ஒரு மாட்டை பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த மாட்டில் பால் கறந்து, வீட்டின் தேவைக்குப் பயன்படுத்தியுள்ளனர். அவரது வீட்டில் காபி குடித்த நெருங்கிய நண்பரக் ஒருவர், எங்கே பால் வாங்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார். வீட்டிலேயே மாடு வளர்த்து, பால் கறப்பதைக் கூறியவுடன், இனி தினமும் தனது வீட்டுக்கு ஒரு லிட்டர் பால் கொடுத்துவிடுமாறு அன்புடன் கேட்டுள்ளார். ஒரு இளைஞரை வேலைக்கு வைத்து, தினமும் நண்பரின் வீட்டுக்கு ஜனார்த்தனன் பால் அனுப்பியுள்ளார். லிட்டருக்கு ரூ.120 கொடுத்தபோதும், பணிபுரியும் இளைஞருக்கு சம்பளம், போக்குவரத்து செலவு என மாதம் ரூ.5 ஆயிரம் தாண்டியுள்ளது. இதை நண்பரிடம் கூறியபோது, தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பேசி, எல்லோர் வீட்டுக்கும் பால் சப்ளை செய்ய அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஓராண்டுக்கான பால் பணத்தை முன் பணமாக வாங்கிக் கொடுத்து, அதில் மாடு வாங்கி, பால் கறந்து, எல்லா வீட்டுக்கும் சப்ளை பண்ணவும் வலியுறுத்தியுள்ளார். இப்படி 4 மாடுகளுடன் தொடங்கிய பயணம், படிப்படியாக வளர்ந்தது. தரமான பால் விநியோகம் செய்ததால், கணபதி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நிறைய பேர் வந்து, பால் வாங்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து, `கிராமத்துப் பால்’ என்ற பெயரில் பால் பண்ணை தொடங்கியுள்ளனர். தற்போது 300-க்கும் மேற்பட்ட மாடுகளுடன், கணபதி, பெரியநாயக்கன்பாளை யம், சூலூரில் மாட்டுப் பண்ணைகள் நடத்தி வருகின்றனர். பால் விநி யோகத்தில் சிறிதும் சமரசம் மேற்கொள்ளாமல், மிகத் தூய்மையான, தரமான பாலையும், பால் பொருட்களையும் மட்டுமே விற்பனை செய்கிறார் ஜனார்த்தனன். பால் சார்ந்த தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர் என இவரது விற்பனைப் பொருட்கள் சுவை, தரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. மக்களின் நம்பிக்கையை மட்டுமே தனது பெருமை யாகக் கருதுகிறார் ஜனார்த்தனன். அது மட்டுமின்றி கோவை பெரியநாய க்கன்பாளையம், ஈரோடு சித்தோடு பகுதிகளில் 40 ஏக்கரில் மாட்டுத் தீவணங்களையும் சாகுபடி செய்கிறார். மாடுகளிடம் இருந்து கிடைக்கும் கோமியம், சாணம் உள்ளிட்டவற்றைக் கொண்டு பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்து கின்றனர். அதேபோல, மாடுகளுக்கு மக்காச் சோளம், சூப்பர் நேப்பியர் புல், கடலைப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கோதுமை தவிடு, மக்காச்சோளம்னு ஆரோக் கியமான தீவனங்களையே கொடுக்கின்றனர். குடும்பமே பால் பண்ணைத் தொழிலில்… இவரது மனைவி அபிநயா, பள்ளி ஆசிரியர் பணியை விட்டுட்டு, முழு நேரமாக பால் பண்ணைத் தொழிலுக்கு வந்துவிட்டார். சிவில் இன்ஜினியரான தம்பி வேணுகோபால், கொள்முதல், சப்ளை, அக்கவுண்ட்ஸ் பார்த்துக் கொள்கிறார். ஜனார்த்தனின் மகள் அஸ்விகா, மகன் அத்விக் ஆகியோரும்கூட பால் பண்ணைத் தொழிலைக் கற்றுக் கொண்டுவருகின்றனர். தங்களது குடும்பத்தில் ஒருவராகவே மாடுகளைக் கருதும் இவர்கள், தினமும் 2 முறையாவது மாடுகளை குளிக்க வைத்துவிடுகின்றனர். இதுகுறித்து ஜனார்த்தனன் கூறும்போது, “நான் நிறைய பேருக்கு, பால் பண்ணையோட அடிப்படை விஷயங்களை கத்துக்கொடுக்கறேன். வேளாண்மை பல்கலைக் கழகம், விவசாயக் கல்லூரி மாணவர்கள், கால்நடை பராமரிப்பு படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் இலவசமாக வகுப்புகளை நடத்தறேன். தினமும் 25 லிட்டர் பாலை, கஷ்டப்படறவங்க, ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றோருக்கு இலவசமாக வழங்கி றோம். இன்னும் அதிகமாக வழங்கவும் திட்டமிட்டிருக்கோம். கோயில்களுக்கும் பால் இலவசமாக வழங்கறோம்” என்றார். குவியும் விருதுகள் இவருக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நிறைய விருதுகளை வழங்கியுள்ளன. தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறந்த பால் பண்ணையாளர் விருதும் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவரை நேரில் பாராட்டியுள்ளார். பால் பண்ணைக்காக முதன்முதலாக ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றதும் இவர்தான். இதுமட்டுமின்றி, 500-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை வைத்து, முட்டையும் விற்பனை செய்கின்றனர். பால் பண்ணை வைக்க விரும்பும் இளைஞர்களுக்கு, எல்லா ஆலோசனைகளும், உதவியும் செய்யத் தயாராக இருக்கிறார் ஜனார்த்தனன். கரோனா காலகட்டத்தில் நிறைய பேருக்கு இலவசமாக பால் வழங்கியுள்ளனர். “கோயம்புத்தூர்ல இருக்கற எல்லாருக்கும் தரமான, சுத்தமான பால் கிடைக்கணும். அதுதான் என்னோட லட்சியம். அதேபோல, எல்லாருடைய வீடுகள்லயும் மாடு வளர்க்கணும். எப்படி வேணும்னாலும் பணம் சம்பாதிக்கலாம். ஆனா, அதைவிட, மத்தவங்க ளுக்கு நல்ல பொருளைக் கொடுத்து, சேவை செய்யறோம்ங்கற திருப்திதான் பெருசு. என்னோட பயணம் இதை நோக்கித்தான் எப்பவும் இருக்கும்” என்கிறார் ஜனார்த்தனன்.
டைம்ஸ் குழும விருது:
அண்மையில், டைம்ஸ் குழுமம் சென்னையில் நடந்த சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா வில், சிறந்த பால் பண்ணையாளருக்கான விருதை கிராமத்துப் பால் நிறுவனரான டாக்டர் கே.ஜனார்த்தனன், இணை இயக்குநர் அபிநயா ஆகியோருக்கு வழங்கி கவுரவித்தார் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.இதையடுத்து, கோவை யின் முக்கியப் பிர முகர்கள், அரசியல் கட்சியினர், தொழில், வணிக நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினரும் ஜனார்த்தனனை பாராட்டி வருகின்றனர்.
S.KAMALAKANNAN Ph.no.9244317182