கோவையின் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக சின்னியம்பாளையம் பகுதியில் வீடுகள் மற்றும் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படுகின்றன. இங்கு வீடுகளும் கையகப்படுத்தப்பட்ட உள்ளன. வீட்டு உரிமையாளர்கள் தற்போதைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சின்னியம்பாளையம் இருகூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் வீட்டு நிலங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். வீடு நிலங்களுக்கு ஒரு சதுர அடி ரூபாய் 3000 மற்றும் வீடுகள் கட்ட ஒரு சதுர அடிக்கு 2,500 ரூபாயும் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு நிலங்களுக்கு ஒரு சதுர அடிக்கு 3000 ரூபாயும் தொழிற்சாலை வேறு இடங்களில் கட்டுமானம் செய்ய சதுர அடிக்கு ரூபாய் 3000 ரூபாயில் தொழிற்சாலையில் உள்ள பொருள்களை எடுத்துச்சென்று மீண்டும் வேறு ஒரு இடத்தில் அமைக்க சதுர அடிக்கு ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்தில் பாதிக்கப்படுவோருக்கு அரசு மாற்றிடம் வழங்கி அரசு சான்றிதழ்களை வழங்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். இழப்பீடு வழங்கிய பின் இரண்டு ஆண்டு காலம் தற்போதைய இடத்தில் இருந்து வெளியேற கால அவகாசம் தரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். அதிகாரிகளுக்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப் பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.