விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களுக்கு வழங்கிய தொகையை அதிகரிக்கக் கோரி மனு

vlcsnap-2021-10-06-04h43m06s76.png

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விமான நிலையத்தை சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான இழப்பீடும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசு தரும் இழப்பீட்டில் தற்போது நிலம் மட்டுமே வாங்க முடிவதாகவும் வீடு கட்ட முடியாது எனவும் கூறி உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத் தலைவர் சந்திரன்  கூறுகையில் விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக உப்பிலிப்பாளையம் கிராமத்தில் உள்ள சாஸ்தா நகர், அருள் முருகன் நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 110 வீடுகள் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும்  அதிலும் 20 வீட்டார்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதே சமயம் அரசு வழங்கும் இழப்பீடு தொகையானது 4 செண்ட் இடத்தில் தார்சு வீடு கட்டி இருப்பவர்களுக்கு 33 லட்சம் முதல் 38 லட்சம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் 2 சென்ட் சிமெண்ட் சீட் வீடு இருப்பவர்களுக்கு 15 லட்சம் என மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர் . எனவே மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

scroll to top