விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன்

gd-naidu.jpg

நடிகர் மாதவன் மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராகெட்ரி: நம்பி விளைவு’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார் மாதவன். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘தோகா ரவுண்ட் தி கார்னர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து மாதவன் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ஜி.டி.நாயுடு’. இதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு போஸ்டரில் ஜி.டி. நாயுடு போன்ற ஒரு நபர் கார் ஒன்றுக்கு முன்பு நிற்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் மாதவன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதே தவிர, படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் படத்திலும் மாதவன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

scroll to top