விஜிலென்ஸ் அதிகாரி என மிரட்டி முதியவரிடம் தங்கமோதிரம் பறிப்பு- 2 பேர் கைது

பெரியார் பேருந்து நிலையம் அருகே விஜிலென்ஸ் அதிகாரி என மிரட்டி, முதியவரிடம் மோதிரம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவலன் நகர் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 55 .இவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த இரண்டு பேர் வெங்கடேசனை மிரட்டி தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரி என்று கூறி அவர் அணிந்திருந்த அரைப் பவுன் தங்க மோதிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, வெங்கடேசன் திடீர் நகர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோவை குனியமுத்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்த அஜிராசெரீப் 40, திண்டுக்கல் பச்ச மலையான் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிசங்கர் 45. ஆகிய இருவரையும் கைது செய்து மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.

scroll to top