விஜய் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தார் சிவகார்த்திகேயன்

WEB-1-scaled.jpg

இயக்குநர் நெல்சன் இயக்கிய திரைப்படம் ‘டாக்டர்’ இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்திருந்தனர். இவர்களுடன் வில்லனாக நடிகர் வினய், யோகி பாபு, தீபா, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இந்த வருடம் வெளியான மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை டாக்டர் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த வருடத்தில் அமெரிக்காவில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாஸ்டர் திரைப்படம் இருந்தது. ஆனால் தற்போது வெளியான டாக்டர் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது  அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்த நிலையில் தற்போது அந்த சாதனையை ‘டாக்டர்’ முறியடிக்கப் பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஸ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் வசூலைவிட அதிக வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top