விஜய்யின் 66வது படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு

விஜய்யின் 66வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக பைரவா, சர்கார் ஆகிய படங்களில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது அதனால் தமிழில் பிரபலமான நடிகையை கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் அதே சமயம் தெலுங்கிலும் அவர் நன்றாக அனைவரும் அறிந்த முகமாக இருக்க வேண்டும் என்பதால் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

scroll to top