விசைத்தறிக் கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறத்தி,  திருப்பூர், கோவை மாவட்ட உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துபடி, விசைத்தறியாளர்கள் ஜன.9ஆம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை  எவ்விதமான தீர்வும் ஏற்படாததால், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தெக்கலூர் பகுதி முழுவதும்  உள்ள விசைத்தறி கூடங்கள், வீடுகள், தொழிலாளர்கள் தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் விசைத்தறியாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

scroll to top