வாளுடன் பதுங்கியிருந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

குருவிக்காரன் சாலையில், டாஸ்மாக் பார் பின்புறம் வாளுடன் பதுங்கி இருந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகர் சப்-இன்ஸ்பெக்டர் சுபா, போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, குருவிகாரன் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் பார் பின்புறமாக சிலர் போலீஸாரை கண்டதும் பதுங்குவது தெரியவந்தது . அவர்,போலீசாருடன் பின்புறமாக சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களில், அண்ணா பஸ் ஸ்டாண்ட் சாத்தமங்கலம் குறுக்கு தெருவை சேர்ந்த சிவகுமார் 19. மற்றும் சிம்மக்கல் எம.சி. காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறையை சேர்ந்த மற்றொரு 17. வயது சிறுவன் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு வாலுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று வாளையும் பறிமுதல் செய்தனர்.

scroll to top