வால்பாறை அருகே இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் யானையின் உடற்கூறு ஆய்வு

.jpeg

வால்பாறை பூனாச்சி அருகே சனிக்கிழமை அன்று ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது ரோந்து பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு ஆனைமலை புலிகள் காப்பகம்  கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மருத்துவ குழு ஞாயிற்றுக்கிழமை அன்று உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. உடற்கூரு ஆய்வின் போது தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.

இறந்த யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. வேட்டையாடப்பட்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இறந்த யானை சுமார் 37-42 வயது இருக்கலாம். உடற்கூறு ஆய்வு முடிந்து சடலம் இயற்கையான சிதைவுக்காகவும், மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் பொருட்டு விடப்படுகிறது.  

scroll to top