வால்பாறையில் பொதுமக்களை மிரட்டும் காட்டுயானைகள் கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் தொழிலாளர்கள் பணிசெய்யும் தேயிலைத் தோட்டம் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலாவருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள தோணிமுடி மற்றும் முத்துமுடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளது. காட்டுயானைகள் நேற்று இரவு முதலே ஒன்றுகூடி முகாமிட்டுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து வனத்துறையினர், காட்டுயானைகளை அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட வாகுபாறை வனப்பகுதிக்கு விரட்டும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள காட்டு யானைகள் கூட்டம் தற்போது ஒட்டுமொத்தமாகக் கூடி இருப்பதால் அப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

scroll to top