மதுரை டிச 21 கீரைத் துறையில் வாலிபரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி பிளேடால் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் கொத்தனார் தொப்புவை சேர்ந்தவர் முருகேசன் 55. இவரது உறவினர் ராஜ ஜெயந்தன். முருகேசனின் மகனுக்கும் ராஜஜெயந்தனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கொத்தனார் தோப்பு வில் முருகேசனின் மகனை வழிமறித்து ராஜஜெயந்தன், மணி ,டிராவிட், ஆகியோர் மிளகாய் பொடியை தூவி விட்டு பிளேடால் தாக்கி விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்துமுருகேசன் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்ள் மூவரையும் தேடி வருகின்றனர்.
வாலிபரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பிளேடால் தாக்குதல்
