நவம்பர் 22 அன்று கோவை வ.உ.சி மைதா னத்தில் முதல்வர் பங் கேற்ற அரசு விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவானுக்கு அரங்கின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு மேடை யில் இருக்கை கொடுத்து அமர வைத்தார் விழா நாயகர் ஸ்டாலின். இது பாஜக, அதிமுக, திமுகவினருக்குள் பல்வேறு அரசியல் சர்ச்சை களை கிளறி விட்டு உள்ளது.
வ.உ.சி மைதானம் கோவை தெற்குத் தொகுதிக்குள் உள்ளது. இதன் எம்.எல்.ஏ பாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவரான வானதி சீனிவாசன். கோவையின் 10-ல் 9 தொகுதிகளிலும் அதிமுக எம்.எல்.ஏக்களே உள்ள நிலையில் அவர்கள் ஆதரவுடன் பாஜகவில் வென்றவர்தான் வானதி. கோவையில் முதல்வர் கலந்து கொள்ளும் முதல் அரசு விழா என்பதால் இதற்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை – குறிப்பாக தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் வானதியை அழைக்க வேண்டிய முறைமை மாவட்ட நிர்வாகத்திற்கு இருந்தது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 10 எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடப்பட்டு, அரங்கின் முன் வரிசையில் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால்
அதிமுகவின் 9 எம்.எல்.ஏக்களும் வரவில்லை. மாறாக பாஜக வானதி மட்டும் வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார். அதைப் பார்த்த ஸ்டாலின் அவரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேடை இருக்கையில் அமர்ந்த அவர், தனக்கு பேச வாய்ப்பு கிடைத்தபோது அரசின் செயல்பாட்டை பட்டும் படா மலே பேசி விட்டு அமர்ந்தார்.
இதையொட்டி
வானதி செய்தியாளர்க ளிடம் கூறும்போது,
“இதை நான் அரசு விழாவாக தான் பார்க்கிறேன். முதல்வர் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை தற்போது நிறைவேற்ற வந்திருக்கிறார். இது என் தொகுதியில் நடக்கக்கூடிய அரசு விழா, இருப்பினும் என்னை கீழே அமர வைத்து நடத்துவது தான் அவர்களின் அரசியல் நாகரீகம் என நினைத்துக் கொண்டு நான் அமர்ந்து விட்டேன். என் மனதில் இது குறித்து வருத்தம் இருந்தது உண்மை தான். அப்பொழுது சில அமைச்சர்கள் என்னை பார்த்து முதல்வரிடம் கூறி யதை அடுத்து முதல்வர் என்னை மேலே அழைத்து அமர வைத்தார். இது என் தொகுதி மக்களுக்கு கிடைத்த மரியாதையாக தான் பார்க்கிறேன். எனக்கு கிடைத்த தனிப் பட்ட மரியாதையாக பார்க்க வில்லை. தொடர்ந்து முதல் வர் வழங்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, இன்னும் மேம் படுத்துவேன்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் திமுக தரப்பிலோ, ‘கொரானா காலத்தில் கோவைக்கு தடுப்பூசி சரி வர போடவில்லை. ஆஸ் பத்திரியில் படுக்கைகள் இல்லை. அதிமுகவிற்கு கோவை மக்கள் ஓட்டுப் போட்டதால் இந்த அரசாங்கம் அதை புறக்கணிக்கிறது. கோவைக்கான திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன. புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை!’ என்றெல்லாம் வானதி பொதுவாக ஆட்சி பற்றி விமர்சனங்களே செய்து வந்திருக்கிறார். அதையெல்லாம் பொருட்ப டுத்தாது அவருக்கு தலைவர் ஸ்டாலின் மரியாதை செய் திருக்கிறார். தான் திமுக கட்சித்தலைவர் என்ற நிலையில் இல்லாது தமிழக முதல்வர் என்ற முறை யிலேயே நடந்திருக்கிறார். இதுவே அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர் கட்சி எம்.எல்.ஏக்களை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படி அரசியல் நாகரீகம் அறியாதவர் அல்ல எங்கள் தலைவர்!’’ ஆனால் உள்ளூர் பாஜகவின ரிடமோ இதையொட்டி கடும் விமர்சனம்.
‘‘அத்தனை அதிமுக எம்.எல்.ஏக்களும் வராத நிலை யில் அவர்கள் தயவால் வென்ற இவர் எதற்கு அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. அத னால் அலுவலர்கள் வாய் மொழியாக போனில் விழா விற்கு அழைத்தார்கள் என்று அவர் சொல்கிறார். அதை எப்படி ஏற்றுக் கொள் வது? அவர் தொகுதி எம்.எல்.ஏ மட்டும் அல்ல. எங்கள் கட்சியின் தேசிய மகளிர் அணித்தலைவரும் ஆவார். அப்படிப்பட்டவர் தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் மேடையில் இருக்கை ஒதுக்கப்படாத நிலையில் எதற்காக அரங்க வரிசையில் அமரவேண்டும்? அப்படியே அமர்ந்தாலும் அங்கேயே அமர்ந்திருக்க வேண்டியதுதானே? முதல்வரே மேடைக்கு அழைத்தாலும், ‘இல்லை பராவாயில்லை!’ என்று சொல்லி அங்கேயே அமர்ந் திருக்கலாமே. அவர் அழைத்ததும் மேடைக்குப் போனதும் அவர்கள் அல்லவா பெருந்தன்மையுடன் நடந்து கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். இது எங்களு க்குத்தானே சிறுமை? இதை மற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் எப்படி பார்ப்பார்கள். தேசியத்தலைமை எப்படிப் பார்க்கும்? இதில் உள்ளூர் கட்சிக்காரர்கள் எங்களுக்கே உடன்பாடில்லை…!’’ என்று பொங்கினர் சிலர்.
பொதுவான அரசியல் நோக்கர்களோ
இந்த நிகழ்வை திமுக-பாஜகவை அரசு- அரசியல் ரீதியாக நெருங்கி வரும் விதமாகவே பார்க்கின்றனர்.
அதாவது 1996-2001 வரை இருந்த திமுக அரசு தமாகாவுடனே கூட்டணியுடன் பின்னிப் பிணைந்திருந்தது. 1998 தேர்தலில் பாஜகவை கடுமையாக எதிர்த்தது. மதவாதக்கட்சியாகவே கருதியது. அந்த தேர்தலில் மத்தியில் வாஜ்பாய் அரசாங் கம் அமைந்ததும் தன் போக்கை சற்றே மாற்றிக் கொண்டு, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டது.
இந்த நிலையில்தான் வாஜ்பாய் அரசுக்கு 13 மாதத்தில் சிக்கல் வந்தபோது நம்பிக்கையில்லா தீர்மானத் தில் பாஜக ஆதரவு நிலை எடுத்ததோடு, அடுத்து நடந்த தேர்தலில் பாஜகவுடனே கூட்டணி சேர்ந்தது. அதைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசில் இடம் பெற்று அவர்களுடன் இணக்க மாகவே செயல்பட்டது. தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டு சேர்ந்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர பாஜக பிரயத்தனம் செய்தும், அதற்கு மறுத்து விட்டது திமுக தலைமை.
இந்த காலகட்டத்தில் தமிழக பாஜக தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ஆர் போன்றோர் திமுக சார்பு, அதிமுக சார்பு அணியாக நின்றதை தமிழகமே கண்கூடாகப் பார்த்தது. 2006- 2011 வரை மத்தி யில் காங்கிரஸ் ஆட்சி இருந்த வரை அதை விட்டு விலகவேயில்லை திமுக. அதற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மாநிலத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தி ருக்கிறது திமுக.
ஆனால் இப்போது மத்தியில் தொடர்வதோ மோடி ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளில் இபிஎஸ், ஓபிஎஸ் எப்படியோ மோடி அரசுடன் இணக்கமாக இருந்து மத்திய நிதி உதவிகளை தமிழகத்திற்கு நீக்கமற பெற்று விட்டனர். மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கூட நிதி உடனுக்குடனே வந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசிடமிருந்து யானைப் பசிக்கு சோளப்பொரி கிடைப் பதே அரிதாக இருக்கிறது. அதனால் பல திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. திமுகவிற்கு மத்திய பாஜக அரசுடன் இணங்கிப் போக வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் அதற்கான தொடர்பு துண்டித்து கிடக்கிறது.
‘‘முந்தைய தமிழக பாஜக தலைவர்களுக்கு சி.பி.ஆர், இல.கணேசன், பொன்னார் போன்றவர்கள் திமுகவிடம் நெருக்கம் பாராட்டுபவர்கள். ஆனால் அவர்கள் செல்வாக்கு, சொல்வாக்கு இப்போதைக்கு மோடியிடம் திமுகவிற்கு பரிந்துரைக்கும் நிலையில் இல்லை. எனவே தான் மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால் ஒழிய தமிழகத்திற்கான நிதி ஆதாரங்களை மத்திய தொகுப்பிலிருந்து வாங்குவது சிரமம். அதற்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட- திமுக பாஜ கவிடம்-குறிப்பாக வானதி, அண்ணாமலை போன்றவர்களிடம் வளை ந்து கொடுத்துப் போக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது அது எந்த அளவுக்கு இவர் களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்!’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய அரசியல் நடுநிலையாளர்கள்.
-சபா கமலக்கண்ணன்