மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆலோசனையின் பேரில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில், அதிமுகவின் புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது
.
இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச்செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், துரை தன்ராஜ், வக்கீல் திருப்பதி , மாணவரணி மகேந்திர பாண்டி, ஒன்றியச் செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி எம். வி. பி. ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மணிமாறன், ஜெயராமன், ராமநாதன், பாண்டி, செந்தாமரை, கண்ணன், சந்திரபோஸ், தென்கரை நாகமணி, கோட்டைமேடு பாலா உள்பட வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், அதிமுக உறுப்பினர்களுக்கான புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.