மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாரதிய கிசான் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகம் முன்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது விவசாயிகளை சுய சார்பு ஆக்குதல் 75வது சுதந்திர தின ஆண்டிலிருந்து இடைத்தரகர்களின் சூழ்ச்சிகளில் இருந்து விவசாயிகளை காப்பாற்றுவது, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது, வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்காக வழிமுறைகளை சட்டபூர்வமாக எளிமையாக மற்றும் விவசாயத் துறை மூலமாக வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் விதத்தில் வேளாண் தொழில் கூடங்கள் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் குருசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணைத் தாசில்தாரிடம் சங்கத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் தேசிய மாநில மாவட்ட ஒன்றிய மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.