வாக்காளர் முகாம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆய்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மாற்றம் திருத்தம் செய்து கொள்வது தொடர்பான சிறப்பு முகாம் டிசம்பர் 13,14 மற்றும் 20, 21 ஆம் தேதிகளில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் இந்த வாக்காளர் சிறப்பு முகாமை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், இதனை தொடர்ந்து மேலக்கோட்டை தேசிய நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் பேருந்து நிழற்குடை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். அப்பொழுது, தற்பொழுது வட பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மானாவாரி பயிர் நீண்ட நெடு நாள் பயிர் தற்போது, பெய்து வரும் மழையால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.

அவர் பேட்டி அளித்தார் :
மேலும், தேசிய பேரிடர் மீட்புப்பணி மற்றும் நிவாரணம் அதிமுக ஆட்சியின்போது ஒரு உயிர் சேதம் கூட இல்லாமல் மக்களுக்கு சேர வேண்டிய நிவாரணங்கள் அனைத்தும் உரிய காலத்தில் கொடுக்கப்பட்டது. அதேபோல், தற்போது, திமுக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், திறப்புவிழாவில், திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன், திருமங்கலம் யூனியன் சேர்மன் லதாஜெகன்,முன்னால் சேர்மன் தமிழ்ழகன், வழக்கறிஞர் அனி வெங்கடேஸ்,முதுராஜா, கூட்டுற்வு சங்க தலைவர் ஆண்டிசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

scroll to top