வரும் 25-ம் தேதி நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் இந்தியா வருகை

lk-e1650468720733.jpg

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹூட்ஃபெல்ட் வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளார். இதனை நார்வே தூதரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் நார்வேயும் இந்தியாவும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பொதுவான லட்சியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகுதியில் இந்தியாவின் இலக்குகளை நிறைவேற்ற, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தியின் பெரிய அளவிலான வளர்ச்சி தேவைப்படுகிறது. இதற்காக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச தொழில்நுட்பம் தேவை. இது நார்வே வணிகம் மற்றும் தொழில்துறைக்கு சிறந்த வாய்ப்புகளைத் வழங்குகிறது. எனவே நார்வேவின் பல நிறுவனங்கள் இந்த பயணத்தின்போது பங்கேற்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

scroll to top