வரும் முன் காப்போம் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: எஸ்.டி.பி.ஐ.

மற்றும் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம், எஸ்.டி.பி.ஐ
மதுரை வடக்கு மாவட்டம் வடக்கு தொகுதி 31 & 37,வது வார்டு சார்பில், மதுரை அண்ணாநகர், யாகப்பா நகர் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் முகாமினை, கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தொடங்கி வைத்தார்…
வடக்கு தொகுதி செயலாளர் பாஷா தலைமை வகித்தார்.
வடக்கு தொகுதி துணைத் தலைவர் ரபீக் ராஜா, வரவேற்புரை நிகழ்த்தினார்..
மாவட்டத் தலைவர் பிலால் தீன் ,துணைத் தலைவர் ஜாபர் சுல்தான், செயலாளர் கமால் பாட்சா, யாகப்பாநகர் கிளை தலைவர் அப்பாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக, கோமதிபுரம் கிளை செயலாளர் பரக்கத் அலி நன்றியுரை நிகழ்த்தினார்..
சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் நிலவேம்பு கசாயம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

scroll to top