வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Stalin-2.jpg

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களக்கு அரசு வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மற்ற சாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடியானது. இந்த நிலையில், ‘வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் நடைபெற்றது.

scroll to top