வத்திராயிருப்பு பகுதிகளி்ல் தொடர் மழை…பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Pi7_Image_WhatsAppImage2022-08-04at1.53.45PM.jpeg

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பெரியாறு அணையில் 20 அடி தண்ணீர் தேங்கியிருந்தது. கடந்த ஒரு சில நாட்களில் தண்ணீர்வரத்து மிகவும் அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 28 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெரியாறு அணைக்கு 8 அடி நீர் வந்துள்ளது. மேலும் தொடர்ந்து மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் இன்னும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

scroll to top