வத்திராயிருப்பு அருகே, 5 பேரை பாட்டிலால் குத்திய போதை ஆசாமி கைது.

202203160042234042_Man-arrested-for-cheating-on-woman_SECVPF.jpg

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நடைபெற்று வரும் பகுதியில், ஒலி பெருக்கி மூலம் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (31) என்பவர் போதையில் வந்து, ஒலி பெருக்கியை நிறுத்துமாறு கூறி தகராறு செய்தார். அங்கே இருந்தவர்கள் ஆனந்தை வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். ஆனாலும் அங்கேயே நின்று கொண்டு, ஆனந்த் அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டார். சிலர் இதனை தடுக்க முயன்றனர். போதையில் இருந்த ஆனந்த் அங்கிருந்தவர்களை ஒரு பாட்டிலை உடைத்து குத்தியுள்ளார். இதில்
முத்தையா (47), சேகர் (44), ராம்குமார் (19), சுந்தரமூர்த்தி (36), கருப்பசாமி (56) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், பாட்டில் குத்து காயமடைந்த 5 பேரையும் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்தையா மற்றும் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த கூமாப்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, 5 பேரை பாட்டிலால் குத்தி காயப்படுத்திய போதை ஆசாமி ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

scroll to top