வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நெல்சன்

rajni-copy-e1650377887736.jpg

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்னதாகவே நடிகர் ரஜினியின் 169வது படத்தை இயக்க நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் உறுதி செய்தது. இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், நெல்சன் தயாரிப்பில் 169வது படத்தில் நடிகர் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் வேகமாக செய்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குநர் நெல்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ள பயோவில், தான் எடுத்து வெளியான மூன்று திரைப்படங்கள் பெயருடன், தலைவர்169 என்ற பெயரையும் சேர்த்துள்ளார்

scroll to top