அரசு பொதுத் துறை வங்கிகளை, மத்திய அரசு தனியார் மயமாக்குதலைக் கண்டித்து, மதுரையில் இரண்டு நாள்கள் அனைத்து பொதுத் துறை ஊழியர்களும், தனியார் மயமாக்குதலைக் கண்டித்து பணிகளை புறக்கணித்தனர். மதுரை நகரில் பல இடங்களில், வங்கி ஊழியர்கள், வங்கி வாசல் முன்பாக, மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து கோஷமிட்டனர். இதனால், மதுரையில் அரசு பொதுத்துறை வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டது.