‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பு சார்பில் ZED திட்டம்’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Pi7_Image_IMG_20221104_113329_1.jpg

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பு சார்பில் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திருமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிலையத்தின் உதவி இயக்குனர் கயல்விழி, லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு வரும் ZED எனப்படும் ‘நிலையான, பழுதில்லா உற்பத்தி மற்றும் விளைவில்லா உற்பத்தி சான்றளிப்பு திட்டம்’ குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் லகு உத்யோக் பாரதி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top