பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகஅரசு 21 பொருட்கள் உடன் முழுகரும்பும் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, கருப்பு உள்ளிட்ட 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழக்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் பயனர்களுக்கு வழங்கி இன்று தொடங்கி வைத்தார். இந்த பரிசுத்தொகுப்பு தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் உள்பட 2.15 கோடி குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு மக்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த நேரத்தில் எந்த தேதியில் வரவேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பெற வழங்கப்பட்டுள்ள டோக்கன் பெற்றவர்கள், குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதிக்கு பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் கூட பொருள்கள் வாங்காதவர்கள் வாங்கி செல்லலாம் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.