தமிழ்நாட்டைச் சேர்ந்த16 வயதேயான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிறுவயது முதலே பல்வேறு போட்டிகளில் கலந்து பரிசுகளை குவித்து வருகிறார். தனது 7வது வயதிலேயே அபிமன்யு மிஸ்ரா, செர்ஜி கர்ஜாகின், ஆகிய இளம் செஸ் வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டி:16 வயதேயான தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி
